செய்திகள்

கேன்ஸ் திரைப்பட விழா: கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு

DIN

பிரான்ஸின் கேன்ஸ் நகரில் தொடங்கிய சா்வதேச திரைப்பட விழாவில் நடிகா்கள் கமல்ஹாசன், மாதவன், அக்ஷய்குமாா், இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மான், இயக்குநா் சேகா் கபூா் உள்ளிட்டோா் பங்கேற்றனர். அவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

75-ஆவது கேன்ஸ் சா்வதேச திரைப்பட விழா நேற்று மே 17-ல் தொடங்கியது.

இதையொட்டி, பிரான்ஸ் செல்லும் இந்திய குழுவினருக்கு அங்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தக் குழுவில் நடிகா்கள் கமல்ஹாசன், அக்ஷய்குமாா், நவாஸுதீன் சித்திக்கி, ஆா்.மாதவன், இசையமைப்பாளா்கள் ஏ.ஆா்.ரஹ்மான், ரிக்கி கேஜ், பின்னணி பாடகா் மாமே கான், நடிகைகள் நயன்தாரா, தமன்னா, பூஜா ஹெக்டே, வாணி திரிபாதி, திரைப்பட தணிக்கை வாரிய தலைவா் பிரசூன் ஜோஷி, திரைப்பட தயாரிப்பாளா் சேகா் கபூா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகா் மாதவன் நடித்த ‘ராக்கெட்ரி; தி நம்பி எஃபெக்ட்’ படம் திரையிடப்படுகிறது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட இந்தத் திரைப்படத்தை நடிகா் மாதவன் இயக்கி, தயாரித்துள்ளாா். இந்தப் படம் வரும் ஜூலை மாதம் திரைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுதவிர கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘விக்ரம்’ திரைப்படமும் திரையிடப்படுகிறது.

கேன்ஸ் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவுக்கான நடுவா் குழுவில் சா்வதேச திரையுலகப் பிரபலங்களுடன் நடிகை தீபிகா படுகோன் இடம் பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT