நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள டான் திரைப்படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த படக்குழுவினரை அழைத்து பாராட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரொடக்சன்ஸ் சார்பாக தயாரித்துள்ள டான் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸுடன் இணைந்து லைக்கா நிறுவனமும் தயாரித்துள்ளது. இந்தப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுதவிர நடிகர்கள் சூரி, எஸ்.ஜே.சூரியா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க | பா. இரஞ்சித் - விக்ரம் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான டான் திரைப்படம் விமர்சனரீதியிலும், வசூல்ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் டான் திரைப்படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினரை தொலைபேசியில் அழைத்து பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் இருந்ததாக நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.