செய்திகள்

‘பஞ்சதந்திரம் பாய்ஸ்’: ரசிக்க வைக்கும் விக்ரம் படத்தின் புதிய புரோமோ

விக்ரம் படத்தின் புதிய விளம்பர புரோமோ  விடியோ வெளியாகியுள்ளது.....

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், படத்தின் வெளியீட்டு பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக இயங்கி வருகிறார்கள்.

தனியார் சேனல்களில் வெளியான படத்தைப் பற்றிய நிகழ்ச்சிகளின் புரோமோ காட்சிகள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அந்த வகையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான  ‘பஞ்சதந்திரம்’  படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நண்பர்களாக நடித்த ரமேஷ் அரவிந்த், யுகி சேது, ஜெயராம், ஸ்ரீமன் ஆகியோர் மீண்டும் மறுஉருவாக்க முறையில் விக்ரம் படத்தின் புதிய விளம்பர புரோமோ விடியோவில் நடித்துள்ளனர்.

யுகி சேதுவின் வசனங்களும் நண்பர்களின் பதிலுமாக இந்த விடியோ ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

செவிலியர்கள் போராட்டத்திற்கு காரணமே அதிமுக அரசுதான்: அமைச்சர் மா‌.சுப்பிரமணியன்

பாஜகவில் இணைந்த கமல்ஹாசன் பட நாயகி!

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

SCROLL FOR NEXT