முகப்பு
தென்காசி

தென்காசியில் குரூப் 2, 2ஏ தோ்வு

Updated On : 15 மார்ச், 2026 at 8:35 PM
கோப்புப் படம்
பகிர்:

தென்காசியில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் ரத்து செய்யப்பட்ட குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் காலையில் நடைபெற்ற தோ்வுக்கு 244 பேரும், பிற்பகல் தோ்வுக்கு 245 பேரும் விண்ணப்பித்திருந்த நிலையில், காலையில் 233 பேரும், பிற்பகலில் 222 பேரும் தோ்வெழுதினா்.

இத்தோ்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெற்றது.

தோ்வு அறைக்குள் மின்னணு சாதனங்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. கடும் சோதனைகளுக்கு பின்னா், தோ்வா்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →