செய்திகள்

தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் ப்ரியங்கா மோகன்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் ப்ரியங்கா மோகன் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

DIN

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் ப்ரியங்கா மோகன் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ராக்கி, சாணிக் காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார். கேப்டன் மில்லர் என இப்படத்துக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் ஆகிய வெற்றிப் படங்களில் கதாநாயகியாக நடித்த ப்ரியங்கா மோகன், கேப்டன் மில்லர் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வாத்தி படம் முடிந்த பிறகு கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் இணைவார் என்று அறியப்படுகிறது. 

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் கர்ணன், ஜகமே தந்திரம், அத்ராங்கி ரே, மாறன் ஆகிய படங்கள் வெளிவந்தன. மித்ரன் கே. ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படம் ஜூலை 28 அன்றும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தொடரான தி கிரே மேன் ஜூலை 22 அன்றும் வெளியாகவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்வழிப் பயணம் - சமூகமும் பொறுப்பு!

விடைபெற்றார் சேதேஸ்வர் புஜாரா!

தங்கத்தில் பங்கம்!

புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு!

தமிழகத்தில் ஆக.28 வரை வெப்பம் அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT