செய்திகள்

அடுத்த விஜய் படம் 100 சதவிகிதம் என்னுடைய படமாக இருக்கும்: லோகேஷ் கனகராஜ் உறுதி

சமீபத்திய யூடியூப் பேட்டி ஒன்றில் அடுத்த விஜய் படம் 100 சதவிகிதம் என்னுடைய பாணியிலான படமாகவிருக்கும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உறுதியளித்துள்ளார். 

DIN

சமீபத்திய யூடியூப் பேட்டி ஒன்றில் அடுத்த விஜய் படம் 100 சதவிகிதம் என்னுடைய பாணியிலான படமாகவிருக்கும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உறுதியளித்துள்ளார். 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த படம் ‘மாஸ்டர்’. இது வழக்கமான விஜய் படங்கள் போல் இல்லை. அதே சமயம் லோகேஷின் படம் போலவும் இல்லை. 50-50 படமாகவே இருந்தது. தற்போது, கமல்ஹாசன் நடித்து ஜூன்3இல் வெளிவரவிருக்கும் 'விக்ரம்’ பட புரமோஷன் ஒன்றில் அடுத்த விஜய் படம் குறித்த தகவலைக் கூறினார். 

“அவ்வளவு பெரிய நடிகரை இயக்கும் போது திடீரென எதையும் புதியதாக எடுக்க முடியாது. அவரைச் சுற்றி பெரிய வணிகம் இருக்கிறது. அதனாலயே 50-50 எடுத்தேன். எனக்கு இப்போது விஜய் சாரை தெரியும். அவருக்கும் என்னைத் தெரியும். மக்களுக்கு என்ன வேண்டுமென எங்களுக்கும் தெரியும். அதனால் அடுத்த படம் 100 சதவிகிதம் என்னுடைய பாணியிலான படமாகவே இருக்கும்” என லோகேஷ் கனகராஜ் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சின்னஞ்சிறு ரகசியமே... பவித்ரா!

டார்ஜிலிங் நிலச்சரிவு: உதவி எண்கள் அறிவிப்பு!

இப்படியும் நடக்கிறதா? அரசுத் திட்டங்கள் பெயரில் பண மோசடி!

“Karur பற்றிய கேள்விகளைத் தவிர்க்கலாம்!” செந்தில் பாலாஜி காட்டம்! | DMK | TVK | VIJAY

மோலிவுட்டிலிருந்து... அஸ்வதி!

SCROLL FOR NEXT