சோகேலுடன் ஹன்சிகா 
செய்திகள்

வருங்கால கணவரின் முதல் திருமணத்தில் பங்கேற்ற ஹன்சிகா...

நடிகை ஹன்சிகா மோத்வானி தன் வருங்கால கணவரின் முதல் திருமணத்தில் பங்கேற்ற விடியோ வைரலாகி வருகிறது.

DIN

நடிகை ஹன்சிகா மோத்வானி தன் வருங்கால கணவரின் முதல் திருமணத்தில் பங்கேற்ற விடியோ வைரலாகி வருகிறது.

நடிகை ஹன்சிகா தமிழில் ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதன்பின் ‘பிரியாணி’, ’சிங்கம் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார்.

அவர் தொழிலதிபர் சோகேல் என்பவரை டிசம்பர் 3 ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார்.

இந்நிலையில், சோகேல் ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு ஹன்சிகாவின் நெருங்கிய தோழியான ரிங்கி என்பவரை திருமணம் செய்துள்ளார். அந்நிகழ்வில் ஹன்சிகாவும் பங்கேற்றுள்ளார். இதுகுறித்தான, விடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

சோகேல் தன் மனைவியை விவாகரத்து செய்ததைத் தொடர்ந்து, ஹன்சிகாவும் சோகேலும் ஏற்றுமதி தொழிலில் பங்குதாரர்களாக செயல்பட்டு வந்துள்ளனர். நண்பர்களாக  இருந்தவர்கள் தற்போது திருமணம் செய்ய உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர்-க்கு எதிர்ப்பு! தொடங்கியவுடன் முடங்கிய மக்களவை!

இலங்கையில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்து: விமானி பலி

சென்னையில் தொடரும் மழை! 5 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை நீடிக்கும்!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது!

இந்தியா கூட்டணி எம்பிக்கள் கார்கே, ராகுல் தலைமையில் ஆலோசனை!

SCROLL FOR NEXT