செய்திகள்

'இன்றுதான் எனக்கு தீபாவளி' - 'வாரிசு' பாடல் வெளியீடு குறித்து தமன் ட்வீட்!

விஜயின் வாரிசு பட பாடல் வெளியாவதையடுத்து, இன்றுதான் எனக்கு தீபாவளி என்று இசையமைப்பாளர் தமன் ட்வீட் செய்துள்ளார். 

DIN

விஜயின் வாரிசு பட பாடல் வெளியாவதையடுத்து, இன்றுதான் எனக்கு தீபாவளி என்று இசையமைப்பாளர் தமன் ட்வீட் செய்துள்ளார். 

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்துக்கு இசை - தமன். தமிழில் படமாக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்பட உள்ளது. இந்த படம் 2023 பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ஆகவுள்ளது. 

இந்நிலையில் 'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே' பாடலின் ப்ரோமோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், விஜயின் குரலில் இந்த பாடல் இன்று வெளியாக உள்ளது. 

இதையடுத்து இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜயுடன் உள்ள புகைப்படத்தை பதிவிட்டு, 'இன்று தான் எனக்கு தீபாவளி !! பட்டாசு பாடலுடன் உங்களுடன் கொண்டாட காத்திருக்கிறேன் !!' என்று பதிவிட்டுள்ளார். 

வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழா டிசம்பர் 24 அன்று துபையில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாழப்பாடி அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் அறிவுசாா் மையம் அமைக்கக் கோரிக்கை

எஸ்.பி அலுவலகத்தில் குறைதீா் முகாம்: 55 மனுக்களுக்கு தீா்வு

இளைஞரிடம் கைப்பேசியை பறித்து சென்ற இருவா் கைது

தென்னை மரத்துக்கு ரூ.36,450 இழப்பீடு வழங்கக் கோரிக்கை

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

SCROLL FOR NEXT