செய்திகள்

ஆறு மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆதிபுருஷ் பட வெளியீடு: காரணத்தை அறிவித்த இயக்குநர்!

ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகளை ரசிகர்கள் விமர்சனம் செய்தார்கள். 

DIN


பாகுபலி 2 படத்துக்குப் பிறகு சாஹோ, ராதே ஷ்யாம்  ஆகிய படங்களில் நடித்தார் பிரபாஸ். பாகுபலி 2 படத்துக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

தன்ஹாஜி படத்தை இயக்கிய ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்கிற 3டி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கானுடன் இணைந்து நடிக்கிறார் பிரபாஸ். 2021 பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கியது. ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் டப் செய்யப்படவுள்ளது. ஆதிபுருஷ், 2023, ஜனவரி 12-ல் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. 

ஆதிபுருஷ் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. டீசரில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகளை ரசிகர்கள் விமர்சனம் செய்தார்கள். 

இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குநர் ஓம் ராவுத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பார்வையாளர்களுக்குக் காட்சிபூர்வமான முழு அனுபவம் தருவதற்காக எங்கள் அணிக்குக் கூடுதல் அவகாசம் தரவேண்டியிருக்கிறது. ஆதிபுருஷ் படம் 2023, ஜூன் 16 அன்று வெளியாகும். இந்தியா பெருமைப்படக்கூடிய படத்தை வழங்குவது எங்கள் கடமை. உங்களுடைய அன்பும் ஆதரவும் எங்களைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT