செய்திகள்

திரிஷாவுக்குக் காலில் என்ன காயம்?

நடிகை திரிஷா காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

நடிகை திரிஷா காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர் திரிஷா. இப்படத்தைத் தொடர்ந்து அவர் ஓய்வு எடுப்பதற்காக வெளிநாடுகளில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளார். 
மேலும் இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் இணையதளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் சுற்றுலாவின்போது காலில் காயம் ஏற்பட்டு, கட்டு போடப்பட்டு இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திரிஷா பதிவிட்டுள்ளார். அதோடு வெக்கேஷன் சென்றதற்குக் கிடைத்த பரிசு என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். 

இதையடுத்து அவர் தனது வெளிநாட்டு பயணத்தையும் பாதிலேயே ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பியதாக கூறப்படுகிறது. இந்த காயம் காரணமாக சென்னையில் நடந்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் சக்சஸ்மீட்டில் திரிஷா கலந்துகொள்ளவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT