செய்திகள்

ஆண்ட்ரியாவின் பாடலை வெளியிட்டு கனிமொழி கூறியது என்ன தெரியுமா?

வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிக்கும் அனல் மேலே பனித்துளி படத்தின் ‘எது நான் இங்கே’ என்ற பாடலை வெளியிட்டார் எம்.பி. கனிமொழி.

DIN

கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில் பல புதிய இயக்குநர்களை வெற்றிமாறன் அறிமுகம் செய்து வருகிறார். அந்தவகையில் தற்போது ஜெய்சர் ஆனந்த் என்ற அறிமுக இயக்குநரின் திரைப்படத்தை வெற்றி மாறன் தயாரிக்கிறார். 

ஆண்ட்ரியா நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு 'அனல் மேலே பனித்துளி' என பெயரிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, விவேக், அறிவு, உமாதேவி ஆகியோர் பாடல்களை எழுதுகின்றனர். வெற்றி மாறனின் விருப்பமான ஒளிப்பதிவாளரான ஆர்.வேல்ராஜ் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜா முகமது படத்தொகுப்பு செய்கிறார்.

இந்தப் படத்தின் உமாதேவி எழுதிய 3வது பாடலின் ப்ரோமோவை திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதி அவர்கள் இன்று வெளியிட்டார். தனது ட்விட்டர் பக்கத்தில், “பெண்ணை, உடலாக, காட்சிப்பொருளாக , பாரம்பரியப் பெருமையாக, சொத்தாக, வன்முறைகளின் இலக்காக, உயிரற்ற புனிதமாகப் பார்க்கும் இந்த சமூகத்தை, வழமையான எண்ணங்களை, கேள்வி கேட்கும், உடைக்க நினைக்கும் தமிழ் திரைப் பாடல்கள் மிக அரிது.  அப்படி வழமைகளை உடைக்கும் உமாதேவி அவர்களின் இந்தப் பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார். 

இந்தப படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் நவம்பர் 18ஆம் நாள் வெளியாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவால்னிக்கு சிறையில் விஷம்: மனைவி குற்றச்சாட்டு

உத்தரகண்டில் மழை, வெள்ளம்: 2,500 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு

சிறப்பு தீவிர திருத்தம்: பாதிக்கும் மேற்பட்டோா் ஆவணம் சமா்ப்பிக்க தேவையிருக்காது - தோ்தல் அதிகாரிகள் தகவல்

முசிறியில் செப்.20-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

அலைகடலுக்கு அப்பால்...

SCROLL FOR NEXT