செய்திகள்

வசூல் வேட்டையில் ’லவ் டுடே’... இதுவரை எவ்வளவு?

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘லவ் டுடே’ திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘லவ் டுடே’ திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ் டுடே. ‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இந்தத் திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ளார்.

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகியுள்ள ‘லவ் டுடே’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா நடித்துள்ளார்.  சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. அதனால், திரையரங்க எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இதுவரை இப்படம் ரூ.22 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் ரூ.50 கோடியைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இப்படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையும் பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளதால் மிகப்பெரிய வெற்றிப்படமானது லவ் டுடே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

SCROLL FOR NEXT