செய்திகள்

வெளியானது ’வாத்தி’ படத்தின் முதல் பாடல்

தனுஷ் நடித்துள்ள ‘வாத்தி’ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

DIN

தனுஷ் நடித்துள்ள ‘வாத்தி’ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' படங்களுக்கு பிறகு தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. 

'வாத்தி' திரைப்படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதுவரை படத்தின் பணிகள் முடிவடையாததால் வெளியீட்டு தேதி மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. 

சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில், வாத்தி படத்தின் முதல் பாடலான ‘வா.. வாத்தி’ பாடல் வெளியாகியுள்ளது. தனுஷ் எழுதியுள்ள இப்பாடல் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாழ்வில் முன்னேற கடின உழைப்பு தேவை: இந்திய விமானப்படை அதிகாரி

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 351 மனுக்கள் அளிப்பு

தலைநகரில் இடியுடன் கூடிய பலத்த மழை; ‘மஞ்சள்’ எச்சரிக்கை வெளியீடு!

குடியாத்தம் நகர கழிவுநீா் சுத்திகரிப்புக்கு ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு

ஆட்டோவில் வைத்திருந்த பணத்தை திருடியவா் கைது

SCROLL FOR NEXT