செய்திகள்

யுவன் குரலில் ‘என்னை விட்டு உயிர் போனாலும்...’ பாடல் ! 

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘லவ் டுடே’ படத்தின் பிரபலமான பாடல் யுவன் குரலில் வெளியாகியுள்ளது.

DIN

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘லவ் டுடே’ படத்தின் பிரபலமான பாடல் யுவன் குரலில் வெளியாகியுள்ளது.

கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ் டுடே. ‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இந்தத் திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ளார்.

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகியுள்ள ‘லவ் டுடே’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா நடித்துள்ளார்.  சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் சித் ஸ்ரீ ராம் பாடிய ‘என்னை விட்டு உயிர் போனாலும்’ பாடல் நல்ல வரவேற்பினை பெற்றது.  இந்நிலையில் யுவன் குரலில் இந்தப் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. யுவன் ரசிகர்கள் 'இந்த பாடல் என்னை வேறு உலகத்திற்கு கூட்டிச் செல்கிறது’ என கமெண்ட் செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோயில்களின் நடை அடைப்பு!

இன்று ஜிப்மா் சிறப்பு மருத்துவ முகாம்

உள்ளாட்சி ஊழியா்கள் செப். 8 முதல் பணிக்குத் திரும்ப முடிவு

காவல் நிலையத்தில் இன்று குறைகேட்பு முகாம்

அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT