செய்திகள்

விஜய் தேவரகொண்டா வெளியிட இருந்த ‘லவ் டுடே’ தெலுங்கு டிரைலர் தள்ளிப்போனது!  

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் தமிழில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘லவ் டுடே’ திரைப்படத்தின் தெலுங்கு டிரைலர் சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

DIN

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் தமிழில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘லவ் டுடே’ திரைப்படத்தின் தெலுங்கு டிரைலர் சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ் டுடே. ‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இந்தத் திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ளார்.

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகியுள்ள ‘லவ் டுடே’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா நடித்துள்ளார்.  சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தெலுங்கில் வெளியிட தயாரிப்பாளர் அர்ச்சனா முடிவெடுத்தார். இந்த டிரெயிலரை விஜய் தேவரகொண்டா இன்று மதியம் வெளியட இருந்தார். எதிர்பாராத விதமாக இன்று மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா காலமானதால் டிரெயிலர் தேதி குறிப்பிடமால தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குஜராத்தில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 3.9 ஆகப் பதிவு!

பாஜக வெற்றி! திருவனந்தபுர காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வாழ்த்து!

திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல சந்திப்பு- முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

சருமத்தில் தேவையற்ற முடி உள்ளதா? எளிய தீர்வு இதோ!

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

SCROLL FOR NEXT