செய்திகள்

அவதாருடன் வெளியாகிறது ‘புஷ்பா 2’ முன்னோட்ட விடியோ

அல்லு அர்ஜூனின் நடிப்பில் உருவாக இருக்கும் புஷ்பா -2 படத்தின் முன்னோட்ட விடியோ அவதார் 2 பாகம் வெளியாகும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

DIN

அல்லு அர்ஜூனின் நடிப்பில் உருவாக இருக்கும் புஷ்பா -2 படத்தின் முன்னோட்ட விடியோ அவதார் 2 பாகம் திரையிடப்படும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதிலும் புஷ்பா படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றது.

வசூல் ரீதியாகவும் ரூ.300 கோடிக்கு வசூலித்தது.

இந்நிலையில், இப்படத்தின் 2 பாகத்திற்காக பூஜை சமீபத்தில் நடைபெற்றது. தற்போது ‘புஷ்பா 2 - தி ரூல்’ படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தின் பாங்காக் காட்டுப்பகுதிகளில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், வருகிற டிச.16 ஆம் தேதி அவதார் 2 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. அப்போது, இந்தியாவில் அப்படம் வெளியாகும் திரையரங்குகளில் புஷ்பா - 2 படத்தின் முன்னோட்ட விடியோ காட்சிப்படுத்தப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT