செய்திகள்

’காந்தாரா’ ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

காந்தாரா திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

காந்தாரா திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகிறார். ஆனால், அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்விக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் கதையே இப்படம்.

தொன்மங்களையும் அதிரடியான சண்டைக் காட்சிகளையும் இணைத்து நல்ல திரைப்படமாக ரிஷப் ஷெட்டி மாற்றியிருக்கிறார்.

கன்னட  வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ரூ.16 கோடியில் தயாரான இப்படம் இதுவரை வெளியான அனைத்து மொழிகளிலும் சேர்த்து ரூ.375 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், காந்தாரா திரைப்படம் வருகிற நவ.24 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தொடக்கம்

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்..? பி.விஸ்வநாதன், செயலர், அகில இந்திய காங்கிரஸ்.

செப்டம்பரில் 36.76 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்

"குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளது' குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

வாழ்க்கைத் துணையாகும் வாசிப்பு

SCROLL FOR NEXT