செய்திகள்

அடிவாங்கும் ஹிந்தி பான் இந்தியா படங்கள்!

அக்‌ஷய் குமார் நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'ராம் சேது' படம் ரூ. 75 கோடி மட்டுமே வசூல்செய்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

அக்‌ஷய் குமார் நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'ராம் சேது' படம் ரூ. 75 கோடி மட்டுமே வசூல்செய்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

அபிஷேக் ஷர்மா இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிப்பில் கடந்த அக்டோபர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘ராம் சேது’. ஜாக்லீன் பெர்னான்டஸ், நுஷ்ரத் பாருச்சா, சத்ய தேவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

ராமர் பாலத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படம் ரூ. 90 கோடி செலவில்  எடுக்கப்பட்ட நிலையில் ரூ. 75 கோடி வசூலுடன் நின்றுவிட்டது. இதனால் ரூ. 15 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சமீபத்தில் ஹிந்தியில் உருவான பான் இந்தியா படங்கள் பெரிதாக வசூல் செய்யவில்லை. ரன்பீர் கபூர் நடிப்பில் ரூ. 160 கோடி செலவில் தயாரான சம்ஷேரா படம் ரூ.70 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

அதுபோல அமீர்கானின் லால் சிங் சத்தா ரூ.200 கோடி செலவில் தயாரான நிலையில் ரூ. 50 கோடி கூட வசூல் செய்யவில்லை. இத்துடன் தற்போது அக்ஷய் குமார் படமும் இனைந்துள்ளது. 

ஹிந்தி பான் இந்தியா படங்களுக்கு தென் திரையுலகில் மார்க்கெட் குறைந்துவருவதாக பேசப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT