செய்திகள்

இயல்பு நிலைமைக்கு திரும்பிய ராஷ்மிகா: அசத்தும் புதிய புகைப்படங்கள்! 

காந்தாரா படத்தின் சர்ச்சைக்கு பிறகு இயல்பு நிலைமைக்கு திரும்பும் வகையில் புகைப்படங்களை பதிந்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.  

DIN

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’, ‘சீதாராமம்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. தற்போது, நடிகர் விஜய் உடன் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். 

அமிதாப் பச்சனுடன் சேர்ந்து பாலிவுட்டிலும் கால்பதித்து விட்டார். அவர் முதன்முதலில் அறிமுகமாகிய கன்னடத்தை மறந்து விட்டதாக கன்னட ரசிகர்கள் அவரை ஆபாச வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் வசைபாடி வந்தனர். அதற்கு ராஷ்மிகா நீண்ட பதிவு எழுதி பதில் சொல்லியிருந்தார். பின்னர் புகைப்படங்கள் எதுவும் பதிவேற்றாமல் இருந்தார். 

தற்போது அந்த பிரச்சினையில் இருந்து முடிந்து இயல்பு நிலைமைக்கு திரும்பும் வகையில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அவர் பகிர்ந்த புகைப்படத்திற்கு தலைப்பில் உள்ள வரிகள் அவர் மீண்டும் இயல்பு நிலைமைக்கு திரும்பி விட்டதாகவே உணர்த்துகிறது. மேலும் அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் "நீங்கள் ராஷ்மிகா அல்ல க்ரிஷ்மிகா" என அன்போடு அழைத்து வருகின்றனர். 

வம்சி இயக்கத்தில் விஜய் உடன் இணைந்து நடித்துள்ள ‘வாரிசு’ படம் பொங்கலுக்கு வர உள்ளது. சமீபத்தில் வெளியான ரஞ்சிதமே பாடல் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளிகளுக்கு வரும் ஹாலிவுட் நிறுவனம்

லோகநாயகி...கல்யாணி பிரியதர்ஷன்!

ஆசை ஆசையாய்... ஜீவிதா!

செயல்படாமல் இருக்கும் மருத்துவ உதவி மையம்: ரயில்வே பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

அப்பாவை நினைவு கூர்ந்த எஸ்.கே.

SCROLL FOR NEXT