கோப்புப்படம் 
செய்திகள்

யோகிபாபு நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் 'ஃபர்ஸ்ட் லுக்' வெளியானது

யோகிபாபு நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ‘தூக்குத்துரை’ எனப் பெயரிப்பட்டுள்ளது.  'ட்ரிப்' படத்தை இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.

DIN

யோகிபாபு நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு 'தூக்குதுரை' எனப் பெயரிப்பட்டுள்ளது.  'ட்ரிப்' படத்தை இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.

இந்த திரைப்படத்தை பற்றி டென்னிஸ் கூறும்போது, ​​"தூக்குதுரை திரைப்படம் அரச குடும்பத்தைப் பற்றிய கதை. அரசர்களின் வாழ்க்கை குறித்து மூன்று காலக் கட்டங்களில்  கதை நகர்கிறது. கிராமத்தையும், கிராம மக்களின் வாழ்க்கையையும்  குடும்பம்  எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் படம் விவரிக்கிறது. 

தூக்குதுரை படம் நகைச்சுவைக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் சென்டிமென்ட் பகுதிகளும் இருக்கும். படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து 2023 மார்ச்சுக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.

மொட்டை ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் இனியா கதாநாயகியாக நடிக்கிறார். பால சரவணன், நமோ நாராயணன், மகேஷ், சென்ராயன், அஸ்வின் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு கே.ரவிவர்மா மற்றும் கே.எஸ்.மனோஜ் இசையமைக்க, தூக்குதுரை படத்தை ஓபன் கேட் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

சமீபத்தில் லவ் டுடே மற்றும் காபி வித் காதல் படங்களில் காணப்பட்ட யோகி பாபு, சிவகார்த்திகேயனின் அயலான், ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் விஜய்யின் வாரிசு போன்ற படங்களில் நடிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

11 ஆண்டுகளில் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லையா? காங்கிரஸ்

SCROLL FOR NEXT