முகப்பு
செய்திகள்

21 ஆண்டுகளுக்குப் பின் பாலிவுட் செல்லும் ஜோதிகா!

நீண்ட இடைவேளைக்குப் பின் நடிகை ஜோதிகா பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:54 AM
பகிர்:

நீண்ட இடைவேளைக்குப் பின் நடிகை ஜோதிகா பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார்.

நடிகை ஜோதிகா கடைசியாக 2021ஆம் ஆண்டு சசிகுமாருடன்  ‘உடன்பிறப்பு’ படத்தில் நடித்திருந்தார். அக்கா - தம்பியின் உறவைக் குறித்து உருவான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து ’காதல்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில், 21 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஜோதிகா ஒப்பந்தமாகியுள்ளதாகவும் இப்படம் ஸ்ரீகாந்த் பெல்லா என்கிற தொழிலதிபரின் வாழ்க்கை வரலாற்று கதை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக, 1997ம் ஆண்டு ‘டோலி சஜா கே ரக்கீனா’ என்கிற ஹிந்தி படத்தில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments