காதலி சபா ஆசாத் உடன் ஹிருத்திக் ரோஷன் 
செய்திகள்

காதலிக்கு ரூ.100 கோடியில் வீடு... நடிகர் ஹிருத்திக் ரோஷன் விளக்கம்

காதலிக்கு ரூ.100 கோடியில் வீடு வாங்கி பரிசளித்ததாக எழுந்த வதந்திக்கு நடிகர் ஹிருத்திக் ரோஷன் விளக்கமளித்துள்ளார்.

DIN

காதலிக்கு ரூ.100 கோடியில் வீடு வாங்கி பரிசளித்ததாக எழுந்த வதந்திக்கு நடிகர் ஹிருத்திக் ரோஷன் விளக்கமளித்துள்ளார்.

பாலிவுட்டில் உச்சநடிகராக இருப்பவர் நடிகர் ஹிருத்திக் ரோஷன். சமீபத்தில் இவர் நடிப்பில் ஹிந்தியில்  ரீமேக் செய்யப்பட்ட ‘விக்ரம் வேதா’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஹிருத்திக் ரோஷன் தன் முன்னாள் மனைவியை 2014 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதனைத் தொடர்ந்து, தற்போது நடிகையும் பாடகியுமான சபா ஆசாத்தை ஹிருந்திக் காதலிப்பதாகவும் விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதற்கிடையே, காதலிக்கு ஹிருத்திக் மும்பை கடற்கரையை ஒட்டி ரூ.100 கோடி மதிப்புள்ள வீட்டை வாங்கி பரிசளித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதனை மறுக்கும் விதமாக ஹிருத்திக் ரோஷன் ‘இது உண்மையில்லை. தவறான தகவல். இதனைப் பகிரவேண்டாம்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT