முகப்பு
செய்திகள்

ஜீவாவின் ‘வரலாறு முக்கியம்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

ஜீவா நடிப்பில் உருவான ‘வரலாறு முக்கியம்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Updated On : 22 நவம்பர், 2022 at 11:14 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:24 PM

ஜீவா நடிப்பில் உருவான ‘வரலாறு முக்கியம்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஆர்,பி. செளத்ரி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள திரைப்படம் வரலாறு முக்கியம். 

இது சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 92-வது படம். நடிகை காஷ்மீரா பர்தேஷி (சிவப்பு மஞ்சள் பச்சை படப்புகழ்) கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் பிரக்யா நாகரா, விடிவி கணேஷ், கே.எஸ். ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா எனப் பலரும் நடித்துள்ளார்கள். சக்தி சரவணன் ஒளிப்பதிவு, இசை - ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷான் ரஹ்மான்.  

Advertisement

இந்நிலையில், இப்படம் வருகிற டிச.9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.