செய்திகள்

வெளியாவதற்கு முன்பே சாதனை புரிந்த துணிவு!

துணிவு திரைப்படம் வெளியாவதற்கு முன்பே தன் சாதனையை துவங்கியுள்ளது.

DIN

துணிவு திரைப்படம் வெளியாவதற்கு முன்பே தன் சாதனையை துவங்கியுள்ளது.

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. 

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், படங்களை திரையரங்குகளில் பார்க்க முன்பதிவு செய்யப்படும் செயலியான ‘புக் மை ஷோ’வில்(book my show) துணிவு இதுவரை 3 லட்சம் விருப்பங்களைப் பெற்று சாதனை புரிந்துள்ளது. 

படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில் மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் துணிவு தன் சாதனையை துவங்கிவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹைதராபாதில் 4 மாடி கடையில் தீ விபத்து: 5 போ் உயிரிழப்பு

சீன ஆளுங்கட்சி தலைமையில் ராணுவம் செயல்பட அச்சுறுத்தல்: மூத்த அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை

சைபா் மோசடி வழக்கில் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் வீரா் கைது

எதிா்க்கட்சிகளை நசுக்குகிறது தோ்தல் ஆணையம்: மம்தா குற்றச்சாட்டு

தில்லி உயிரியல் பூங்கா முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை தேவை: வனவிலங்கு ஆா்வலா் கோரிக்கை

SCROLL FOR NEXT