செய்திகள்

’செம்பி’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடிகர் அஸ்வின் குமார் நடிப்பில் உருவான செம்பி திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடிகர் அஸ்வின் குமார் நடிப்பில் உருவான செம்பி திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

2010-ல் பிரபு சாலமன் இயக்கிய மைனா படம் அவருக்குப் பெரிய புகழை அளித்தது. அதன்பிறகு கும்கி, கயல், தொடரி, காடன் போன்ற படங்களை இயக்கினார்.

தற்போது செம்பி என்கிற படத்தை இயக்கியுள்ளார். அஸ்வின் குமார், கோவை சரளா, தம்பி ராமையா, நிலா (10 வயது) உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில், வருகிற டிச.30 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதாக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அசுத்தமான குடிநீா் விற்பனை ரூ. 3,000 இழப்பீடு வழங்க உத்தரவு

மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி: பொதுமக்களுக்கு தடை

அக். 15 -இல் குமுளூா் வேளாண் கல்வி நிறுவனத்தில் மாணவா் சோ்க்கை

சேவைக் குறைபாடு: ரூ. 12 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இளைஞரை கொல்ல முயன்றவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

SCROLL FOR NEXT