செய்திகள்

ரகசியத்தை உடைக்கும் கியாரா அத்வானி: திருமணம் எப்போது? 

பிரபல ஹிந்தி நடிகை கியார அத்வானி தனது ரகசியங்களை நீண்ட நாள்களுக்கு மறைத்து வைக்க முடியவில்லை என கூறியுள்ளார். 

DIN

201இல் ‘எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ படத்தின் மூலம் ஹிந்தி நடிகை கியாரா அத்வானி பிரபலமானார். அர்ஜூன் ரெட்டி ஹிந்தி ரீமிக்கிலும் நடித்து புகழ் பெற்றார். தற்போது ஷங்கர் ராம்சரண் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது இன்ஸ்டாகிராமில் விடியோ வெளியிட்டு அதன் தலைப்பில், “நீண்ட நாள்களுக்கு ரகசியங்களை வைத்திருக்க முடியவில்லை. டிசம்பர் 2ஆம் தேதி வரை காத்திருங்கள்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இந்த பதிவிக்கு கல்யாண அறிவிப்பா என்று கேட்கிறார்கள். சிலர் சித்தார்த் மல்லோத்ராவுடன் திருமணமா என்றும் கேட்கிறார்கள். இதெல்லாம் ரகசியமில்லை எபோதோ தெரியுமென்றும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர். 

புதிய பட அறிவிப்பா அல்லது திருமணம் குறித்த அறிவிப்பா என தெரிந்து கொள்ள ரசிகர்கள் டிசம்பர் 2வரை காத்திருக்க வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

SCROLL FOR NEXT