ஆல்யா மானசா / பிரியங்கா நல்கார் 
செய்திகள்

ரோஜாவுக்கு பதிலாக சன் டிவியில் புதிய தொடர்!

மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ரோஜா தொடர் முடிவுக்குவரவுள்ளதால், அதற்கு பதிலாக சன் டிவியில் புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. 

DIN

மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற 'ரோஜா' தொடர் முடிவுக்குவரவுள்ளதால், அதற்கு பதிலாக சன் டிவியில் புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. 

சன் தொலைக்காட்சியில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் 'ரோஜா' தொடர் விரைவில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது.

பிரியங்கா நல்கார் - சிபு சூர்யன் ஆகியோர் ரோஜா - அர்ஜுன் கதாபாத்திரங்களில் நடித்த இந்த தொடர் குடும்ப ரசிகர்களையும் தாண்டி இளைஞர்கள் மத்தியிலும் பெரிதாகப் பேசப்பட்டது. 

சன் டிவியின் டிஆர்பி பட்டியலில் முதல் 10 இடங்களில் 'ரோஜா' தொடரும் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இடம்பெற்று வந்தது. தற்போது சன் டிவியின் இந்த தொடர் முடிவுக்கு வரவுள்ளதால், அதற்கு பதிலாக 'இனியா' என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' தொடர் மூலம் மக்கள் மனங்களை வென்ற ஆல்யா மானசா நடிக்கும் இந்த தொடர் ரோஜா தொடருக்கு பதிலாக ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முன்னோட்டக் காட்சிகள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. விரைவில் இனியா தொடர் ஒளிபரப்பப்படும் நேரம் உள்ளிட்டவை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும். 

ஆல்யா மானசாவின் கணவர் சஞ்சீவ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால், கணவன் மனைவி இருவரும் ஒரே தொலைக்காட்சிக்கு மீண்டும் நடிக்கவுள்ளனர்.

மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் சின்னத்திரைக்கு வந்த ஆல்யா, விஜய் டிவியின் ராஜா ராணி தொடரில் மக்கள் மனங்களை வென்றார். இதில் ஆல்யாவுக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் உடன் காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஏற்கெனவே பெண் குழந்தை பிறந்திருந்த நிலையில், ராஜா ராணி இரண்டாம் பாகத்தின்போது, இரண்டாவது குழந்தைக்காக சிலகாலம் தொடர்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஆல்யா மானசா நடிக்க வருவதால், அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

இவர் யாரோ...?

அஜித்தைச் சந்தித்த பிரபல இயக்குநர்கள்! ஏன்?

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

SCROLL FOR NEXT