செய்திகள்

பிரபாஸுடன் காதலா...? நடிகை கிருத்தி சனோன்!

பிரபாஸுடன் காதல் குறித்த செய்திக்கு நடிகை கிருத்தி சனோன் விளக்கம் அளித்துள்ளார்.

DIN

பிரபாஸுடன் காதல் குறித்த செய்திக்கு நடிகை கிருத்தி சனோன் விளக்கம் அளித்துள்ளார்.

பாகுபலி, பாகுபலி 2 என வரிசையாக ஹிட் படங்கள் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். இவர் நடிக்கும் படங்கள் பான் இந்தியா படங்களாக ரிலீஸ் செய்து வசூல் வேட்டை நடத்துகிறது. இதனால், இவரின் சம்பளமும் ரூ. 100 கோடியாக உயர்த்தியுள்ளார்.

இவர், தற்போது நடித்து வரும் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்றதால், மீண்டும் சில காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு, கிராபிக்ஸ் சரி செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனால், ஆதிபுருஷ் படத்தின் வெளியீட்டு தேதியும் தள்ளி போயுள்ளன.

ராமாயண கதையை மையமாக எடுக்கப்பட்டிருக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸும், சீதா கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை கிருத்தி சனோனும் நடித்துள்ளனர்.

இந்த படப்பிடிப்பின் போது, இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு வருகின்றது.

இதற்கிடையே, சில நாள்களுக்கு முன்பு கிருத்தி சனோன் பேட்டி ஒன்றில், பிரபாஸை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறேன் எனவும் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து இருவரது காதலும் உறுதி செய்யப்பட்டுவிட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவியது.

இந்நிலையில் இது குறித்த செய்திக்கு நடிகை கிருத்தி சனோன் இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்துள்ளார். அதில், " இது காதலோ அல்லது விளம்பரமோ இல்லை, ஒரு நிகழ்ச்சியில் எங்கள் bhedia கொஞ்சம் கேளிக்கையாக பேசிவிட்டார். இது வதந்திக்கு காரணமாக அமைந்துவிட்டது. ஏதாவது ஒரு இணையதளம் என்னுடைய திருமண தேதியை அறிவிப்பதற்கு முன்பு நானே விளக்கம் அளிக்கிறேன். வதந்திகள் ஆதாரமற்றவை" என்று கிருத்தி சனோன் தெரிவித்துள்ளார்.

பிரபாஸுடன் காதல் குறித்த செய்திக்கு நடிகை கிருத்தி சனோன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT