செய்திகள்

ரச்சிதாவுடன் காதல்: உண்மையை உடைக்கும் ராபர்ட் மாஸ்டர்!

பிக் பாஸ் வீட்டில் ரச்சிதாவுடன் காதல் குறித்த கேள்விக்கு ராபர்ட் மாஸ்டர் விளக்கம் தெரிவித்துள்ளார்.

DIN

பிக் பாஸ் வீட்டில் ரச்சிதாவுடன் காதல் குறித்த கேள்விக்கு ராபர்ட் மாஸ்டர் விளக்கம் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஷீம், தனலட்சுமி, கதிரவன், மகேஸ்வரி, மணிகண்டா, குயின்ஸி, ராம், சிவின், நிவாசினி, செரினா, அசல், சாந்தி, ஜி.பி.முத்து 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 6வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ் தமிழ் 6' நிகழ்ச்சியின் பிரபல போட்டியாளர்களில் ஒருவரான ராபர்ட் மாஸ்டர் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக வெளியேற்றப்பட்டார். 

இந்நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டர் நடிகை ரச்சிதாவை காதலால் கவர முயன்று பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது செயல்கள் சக போட்டியாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் வேடிக்கையாக இருந்தாலும், திருமணம் ஆன பெண்ணிடம் எல்லை மீறுவதாக கண்டனங்கள் எழந்தன.

ராபர்ட் மாஸ்டர் , 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நானும், ரச்சிதாவும் நல்ல நண்பர்கள். எங்கள் இருவருக்கு உள்ள உறவு வெறும் நட்புதான். பிக் பாஸ் வீட்டில் ரச்சிதாவுடன் தனிமையில் பேச ஆரம்பித்தேன். அப்படியே நட்பு வளர்ந்தது என்று ராபர்ட் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT