நடிகை சமந்தா தற்போது உயர் சிகிச்சைக்காக தென் கொரியா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்கிற நோயால் (தசை அழற்சி) பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சமந்தா அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைப் பெற்று வரும்போதே யசோதா படத்துக்கான பின்னணி குரல் கொடுக்கும் பணியில் கையில் ட்ரிப்ஸ் உடன் ஈடுபட்டார்.
ஒருசில நேர்காணல்களில் பங்கேற்று பேசிய சமந்தா, ரசிகர்களின் அன்பினாலும், வேண்டுதல்களாலும் மட்டுமே கடினமான காலத்தைக் கடந்து வந்ததாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். எனினும் நேர்காணல்களில் வழக்கமான அவரின் துடிப்பு குறைவாகவே இருந்தது.
அடுத்தடுத்து உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், அவரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம்.
வீட்டில் ஓய்வு எடுத்துவரும் சமந்தாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவரின் உடல்நிலை முன்னேறியுள்ளது.
இருந்தாலும், சமந்தாவுக்கு உயர் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தன்பேரில், சமந்தா தென்கொரியா செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: பிரபாஸுடன் காதலா...? நடிகை கிருத்தி சனோன்!
தென்கொரியா சிகிச்சைக்குப் பிறகு, அவர் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள விஜய் தேவரகொண்டாவுடன் 'குக்ஷி' உள்ளிட்ட சில படங்களில் நடிக்க உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.