செய்திகள்

ஹிந்தி விக்ரம் வேதாவின் முதல் நாள் வசூல் ஏமாற்றமளித்ததா?

படத்தை வெளியிட்ட ரிலையன்ஸ் நிறுவனம் முதல் நாள் வசூலை வெளியிட்டுள்ளது.

DIN


விஜய் சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா படம் 2017-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழில் படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி ஹிந்தியிலும் இயக்கியுள்ளார்கள். 

ஹிருதிக் ரோஷன், சயிஃப் அலி கான், ராதிகா ஆப்தே போன்றோர் நடித்துள்ளார்கள். நேற்று (செப்டம்பர் 30) இந்தப் படம் வெளியானது. 

விக்ரம் வேதா படத்தின் முதல் நாள் வசூல் ஏமாளிப்பதுள்ளதாகப் பிரபல திரைப்படப் பத்திரிகையாளர் தாரன் ஆதர்ஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். விக்ரம் வேதா படத்தைப் பார்த்தவர்கள் நல்லவிதமாக விமர்சனம் செய்திருந்தாலும் முதல் நாளன்று அதிர்ச்சிகரமாக குறைந்த வசூலுடன் தொடங்கியுள்ளது. தேசிய அளவில் எதிர்பார்த்ததை விடவும் குறைவான வசூல் கிடைத்துள்ளது. இதைச் சரிசெய்ய 2-வது மற்றும் 3-வது நாள்களில் வசூல் பல மடங்காக வேண்டும். வெள்ளிக்கிழமையன்று இந்தியாவில் ரூ. 10.58 கோடி வசூலித்துள்ளது என்று கூறியுள்ளார். 

விக்ரம் வேதா படத்தை வெளியிட்ட ரிலையன்ஸ் நிறுவனம் முதல் நாள் வசூலை வெளியிட்டுள்ளது. இந்திய அளவில் ரூ. 10.58 கோடியும் வெளிநாட்டில் ரூ. 8.17 கோடியும் வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளது. மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் முதல் நாளன்று ரூ. 80 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

சட்டப்பேரவைத் தோ்தல் : களப்பணியை தீவிரப்படுத்துவோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திருத்துறைப்பூண்டியில் அனுமன் ஜெயந்தி விழா

‘விடுபட்ட வாக்காளா்களை இணைக்கும் பணியில் காங்கிரஸாா் ஈடுபட வேண்டும்’

சிறை தண்டனை நிறுத்தி வைப்பு: விவசாயிகள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT