நாத்திகம் பேசுபவர்கள் மனிதரே இல்லை என பிரபல இயக்குநர் கருத்து தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன், ‘திராவிட இயக்கங்கள் சினிமாவைக் கையிலெடுத்ததால் தமிழகம் மதச்சார்பற்ற மாநிலமாக உள்ளது. சினிமாவை அரசியல் மையமாக்குவது மிகவும் முக்கியம். கலையை சரியாகக் கையாளவில்லை என்றால் நம் அடையாளங்கள் பறிக்கப்படும். நம்மிடமிருந்து அடையாளங்களைப் பறிப்பதற்காக திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கிறார்கள். ராஜராஜசோழனை இந்து அரசனாக மாற்றுகிறார்கள்’ என்றார்.
இதையும் படிக்க: தமிழகத்தில் ’பொன்னியின் செல்வன்’ வசூல் சாதனை..
இதனைத் தொடர்ந்து, வெற்றிமாறனின் இக்கருத்துக்கு பலரும் ராஜராஜசோழன் இந்து இல்லையா? என்கிற கேள்விகளுடன் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திரைப்பட நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் பேரரசு செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘ஒரு இந்துவாக நான் பெருமையாக உணர்கிறேன். ராஜராஜசோழன் இந்து இல்லையென்றால் அவர் என்ன கிரிஸ்துவரா? இல்லை இஸ்லாமியரா? ஒரு மதத்தைப் புகழ்ந்து இன்னொரு மதத்தைப் இகழும் போலி நாத்திகர்களால்தான் இங்கு பிரச்னை. அவர்கள் நாட்டிற்குக் கேடானவர்கள். நாத்திகம் பேசுபவர்கள் மனிதர்களே இல்லை’ எனக் கடுமையாகக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.