செய்திகள்

விஜய் சேதுபதி படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படம் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படம் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோஹந்த் இயக்கத்தில், சந்தரா ஆர்ட்ஸ் தயாரிப்பில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையில் வெளியாகும் எனப் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இயக்குநர் மோகன் ராஜா, மகிழ் திருமேனி, கரு.பழனியப்பன், மறைந்த நடிகர் விவேக்  மற்றும் நடிகைகள் மேகா ஆகாஷ், ரித்விகா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு தீபாவளிக்கே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’  திரைப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படம் குறித்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சேதுபதி விஜய தசமி  வாழ்த்துக்களுடன் இப்படத்தின் அறிவிப்பை தன்னுடைய சுட்டுரை பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT