செய்திகள்

பொன்னியின் செல்வன் வசூல் இவ்வளவா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் உலகளவிலான வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் உலகளவிலான வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னம், ஜெயமோகன், குமரவேல் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியானது. 

இந்தப் படம் முதல் மூன்று நாள்களில் உலகளவில் ரூ. 200 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதன்பின், இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 100 கோடி வசூலைக் குவித்ததாகவும் தமிழ்த் திரையுலகில் மிக வேகமாக (ஆறு நாள்களில்) ரூ. 100 கோடி வசூலைப் பெற்ற படம் என மெட்ராஸ் டாக்கீஸ் விளம்பரத்தில் கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று ’பொன்னியின் செல்வன்’ உலகளவில் ரூ.300 கோடியை வசூல் செய்திருப்பதாக  லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குற்றாலம் பேரருவியில் 2-வது நாளாக குளிக்கத் தடை!

தொழிலாளி வீட்டில்16 பவுன் நகைகள் திருட்டு

திப்பணம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இடம் ஒதுக்க பொதுமக்கள் கோரிக்கை!

பெண் பயணியை பாலியல் வன்கொடுமை செய்து கொள்ளையடித்ததாக பைக் டாக்ஸி ஓட்டுநா் கைது

12 எம்சிடி வாா்டுகளுக்கு நவ.30-இல் இடைத் தோ்தல்

SCROLL FOR NEXT