பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணியிடம் ரூ.1 லட்சம் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நடிகர் வடிவேலு, விவேக் ஆகியோருடன் இணைந்து நடித்து பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் போண்டாமணி. சிறுநீரக பாதிப்பால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு நிதியுதவி வேண்டி அவர் பலரிடம் கோரிக்கை வைத்தார்.
அதன்பின் நடிகர் போண்டாமணிக்கு நடிகர்கள் தனுஷ், விஜய்சேதுபதி இருவரும் ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்கினர்.
இதையும் படிக்க: அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட 'ஹே ராம்' பட நடிகர் மரணம்
தற்போது , அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், போண்டா மணி மருத்துவமனையில் இருந்தபோது அவருக்கு உதவியாக இருந்த ராஜேஷ் என்பவரிடம் போண்டா மணியின் மனைவி மாத்திரை வாங்குவதற்காக அவருடைய ஏடிஎம் அட்டையை கொடுத்துள்ளார். ஆனால், ராஜேஷ் மாத்திரை வாங்காமல் வங்கிக்கணக்கிலிருந்த ரூ.1 லட்சத்திற்கு ஏடிஎம் கார்டு மூலம் தங்க நகைகளை வாங்கி அப்பணத்தை திருடியுள்ளார்.
இதுகுறித்துப் புகார் அளிக்கப்பட்டதும் காவல்துறையினர் விரைந்து சென்று ராஜேஷ்-யை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.