நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலியுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார்.
பாவக் கதைகள் இணையத் தொடரில் தங்கம் என்ற கதையில் சதார் என்ற திருநங்கையாக நடித்து அசத்தினார் காளிதாஸ் ஜெயராம். அந்தத் தொடர் அவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றுத்தந்தது. லோகேஷ் இயக்கத்தில் பெரும் வெற்றிபெற்ற விக்ரம் படத்தில் கமலின் மகனாக சிறிய வேடத்தில் நடித்திருந்தார்,
மேலும் பா.ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படத்திலும் காளிதாஸின் நடிப்பு கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மாடலும் நடிகையுமான தாரணி காளிங்கராயருடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்திருந்தார்.
இதையும் படிக்க | மனிதனை இப்போது குரங்கு என்போமா? சரத்குமார் அறிக்கை: கமலுக்கு பதிலடி?
இதனையடுத்து இருவருக்கும் நடிகைகள் கல்யாணி பிரியதர்ஷன், காயத்ரி, நமிதா, சஞ்சனா நடராஜன், அபர்ணா பாலமுரளி மற்றும் காளிதாஸின் சகோதரி மாளவிகா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக ஓணம் பண்டிகையின்போது நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட படத்திலும் தாரணி உடனிருந்தார். அப்போதே காளிதாஸும் தாரணியும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. தற்போது இருவரும் காதலிப்பது உறுதியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.