செய்திகள்

இரட்டைக் குழந்தைகள்! கடவுள் படத்தைப் பகிர்ந்து உணர்த்திய விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகள்  ஆணா பெண்ணா என்பது குறித்து வெளிப்படையாகவே தெரிவித்திருந்தாலும், இயக்குநர் விக்னேஷ் சிவன் குறிப்பால் உணர்த்தியது ரசிகர்களை கவர்ந்தது

DIN

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்கள் ஆணா பெண்ணா என்பது குறித்து வெளிப்படையாகவே தெரிவித்திருந்தாலும், இயக்குநர் விக்னேஷ் சிவன் குறிப்பால் உணர்த்தியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சிவன், பார்வதி, விநாயகர், முருகனுடன் இருக்கும் படத்தைப் பதிவிட்டு, வெல்கம் டூ மை உயிர் & உலகம் என விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா - விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடித்த கையோடு வெளிநாடுகளுக்கு தேன் நிலவு பயணம் மேற்கொண்டனர். 

தற்போது நான்கு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், நயன்தாராவும் நானும் அம்மா, அப்பாவாகியுள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் குழந்தைகளுடன் இருவரும் இருக்கும் படங்களையும் பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 

திருமணம் முடிந்து நான்கு மாதங்களே ஆகியுள்ளதால், வாடகைத்தாய் அல்லது டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பிறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

இந்நிலையில், புகைப்படங்களில் பகிரப்பட்டுள்ள இரட்டைக் குழந்தைகளும் ஆண் குழந்தைகள் என விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். எனினும் பிறந்த குழந்தைகள் இருவரும் ஆண் குழந்தைகள் என்பதை உணர்த்தும் விதமாக இயக்குநர் விக்னேஷ் சிவன் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். 

அதில், சிவன், பார்வதி, விநாயகர் - முருகருடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, வெல்கம் டூ மை உயிர் & உலகம் என விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் Sengottaiyan! | ADMK

தவெகவா? திமுகவா? செங்கோட்டையன் - சேகர் பாபு சந்திப்பு!

நவ. 29, 30, டிச. 1ல் தமிழ்நாட்டில் மழை பெய்யும்! எந்தெந்த மாவட்டங்களில்?

25 ஆண்டுகளுக்குப் பிறகு... தெ.ஆ. வரலாற்று வெற்றி..! இந்தியா ஒயிட்வாஷ்!

மாவீரன் பொல்லான் சிலையுடன் கூடிய அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்

SCROLL FOR NEXT