செய்திகள்

இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயான நயன்தாரா! படங்களைப் பகிர்ந்த விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது.

DIN

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். குழந்தையுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். 

நீண்டகாலமாக காதலித்து வந்தவர்கள் கணவன் - மனைவியாகி தற்போது அம்மா - அப்பாவாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். 

பிறந்த குழந்தையுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ''நயன்தாராவும் நானும் அம்மா அப்பாவாகியுள்ளோம். இரட்டைக் குழந்தைகளால் நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம். எங்களின் பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசி போன்ற நல்லவற்றின் வெளிப்பாடு எங்களுக்கு இரட்டைக் குழந்தைகளாக பிறந்துள்ளனர்''.

என் உயிர் மற்றும் உலகத்திற்கு உங்களுடைய ஆசிர்வாதமும் தேவை. ஐ லவ் யூ டூ  & ஐ லவ் யூ த்ரீ'' என பதிவிட்டுள்ளார்.  அவருக்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமணம் ஜூன்  9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமணத்தில் நடிகர் இந்திய திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். திருமணம் முடிந்த கையோடு விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி வெளிநாடுகளுக்கு தேன் நிலவுப் பயணம் மேற்கொண்டிருந்தனர். 

நயன்தாரா நடிப்பில் உருவாகவிருக்கும் படங்கள்

'பிரேமம்' இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் 'கோல்டு' மற்றும் 'மாயா' படத்துக்கு பிறகு இயக்குநர் அஸ்வின் சரவணனுடன் கைகோர்த்துள்ள 'கனெக்ட்' போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. 

தற்போது ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் 'ஜவான்' படத்திலும், ஜெயம் ரவியுடன் இணைந்து 'இறைவன்' படத்திலும் நயன்தாரா நடித்துவருகிறார். 

கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து  'தி ரௌடி பிக்சர்ஸ்' சார்பாக படங்களையும் தயாரித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT