நடிகர் சந்தானம் முதன்முதலாக பாடிய பாடல் வெளியானது!
‘கிக்’ படத்திற்காக நடிகர் சந்தானம் முதன் முதலாக பாடிய பாடல் வெளியாகியுள்ளது.
‘கிக்’ படத்திற்காக நடிகர் சந்தானம் முதன் முதலாக பாடிய பாடல் வெளியாகியுள்ளது.
சந்தானம் நடிப்பில் கடந்த வருடம் பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி ஆகிய படங்கள் வெளியாகின. சமீபத்தில் ‘குலு குலு’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் அவருடைய 15-வது படத்தை லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரஞ்ச் போன்ற கன்னடப் படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இயக்குகிறார்.
தாராள பிரபு படத்தில் கதாநாயகியாக நடித்த தான்யா ஹோப் இப்படத்தில் சந்தானத்தின் ஜோடியாக நடிக்கிறார். பாக்யராஜ், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோ பாலா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி போன்றோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் பெங்களூரில் நடைபெற்றது. மேலும் சென்னை, பாங்காங், லண்டன் எனப் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இசை - அர்ஜுன் ஜன்யா.
இந்தப் படத்தில் சந்தானம் முதன் முதலாக பாடகராக அறிமுகமாகியுள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது. ‘சேட்டர்டே இஸ் கம்மிங்’ என்ற பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத சந்தானம் பாடியுள்ளார்.