செய்திகள்

பிக்பாஸில் ஜி.பி.முத்துவின் கேள்வியால் திகைத்த கமல் - வைரலாகும் விடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் மற்றும் ஜி.பி.முத்து உரையாடும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

DIN

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் மற்றும் ஜி.பி.முத்து உரையாடும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சன் டிவியில் தொகுப்பாளராக இருந்த கதிரவன், தொகுப்பாளர் மற்றும் நடிகை மகேஷ்வரி, அமுதவானன், பத்திரிகையாளர் விக்ரமன், நடன இயக்குநரும் சின்னத்திரை நடிகையுமான சாந்தி, இலங்கையைச் சேர்ந்த தொகுப்பாளர் ஜனனி, பாடகர் ஏடிகே, கிரிக்கெட் வீரர் ராமசாமி, சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரும் சின்னத்திரை நடிகர் மணிகண்ட ராஜேஷ், பிரபல மாடல் ஷெரினா, சின்னத்திரை நடிகை ஆயிஷா, நடன இயக்குநர் ராபர்ட், சின்னத்திரை நடிகர் அசீம், நடிகை சிவின் கணேசன், பாடகர் அசல், யூடியூப் பிரபலம் ஜிபி முத்து ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிலையில் ஜி.பி. முத்து முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அப்போது அவர், ''வீட்டில் யாருமே இல்லை, எனக்கு பயமாக இருக்கிறது'' என கமலிடம் வருத்தம் தெரிவித்தார். அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும்விதமாக பேசிய கமல், ''ஆதாமுக்கும் ஏவாலுக்கும் எப்படி இருந்திருக்கும்'' என கேள்வி எழுப்பினார். ''ஆதாமா அவர் யார்'' என்பது போல ஜி.பி.முத்து திருதிருவென முழித்தார். அவருக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் நடிகர் கமல் திகைத்தார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்தவரான ஜி.பி.முத்து டிக் டாக் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். பின்பு தனது யூடியூப் பக்கத்தில் தூத்துக்குடி வட்டார மொழியில் அவர் பேசுவது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதனால் ஜி.பி.முத்து குறுகிய காலத்தில் சமூக வலைதளங்களில் பிரபலமானார். தற்போது திரைப்படங்களிலும் நடித்துவருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னைப் பார்க்கவே தயங்குவார் பழனிசாமி; அவரை முதல்வராக்கியது நாங்கள்! - டிடிவி தினகரன்

தொண்டர்களை ஒழுங்குபடுத்த வேண்டாமா? TVK-வுக்கு நீதிமன்றம் கேள்வி! | செய்திகள்: சில வரிகள் | 18.9.25

மாத்தளை சோமு நூறு சிறுகதைகள்

அருந்ததி ராயின் புத்தக அட்டைப் படத்துக்கு எதிரான வழக்கு! மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

பழந்தமிழர் மரபும் கலையும்

SCROLL FOR NEXT