செய்திகள்

பாண்டியன் ஸ்டோர்ஸிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்த நடிகை - புதிய முல்லை யார் ?

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து திடீரென நடிகை காவ்யா விலகுவதாக அறிவித்துள்ளார். 

DIN

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து திடீரென நடிகை காவ்யா விலகுவதாக அறிவித்துள்ளார். 

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் கடந்த சில ஆண்டுகளாகவே டிஆர்பியில் முன்னணியில் இருக்கிறது. எவ்வளவு புதிய தொடர்கள் வந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அளவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதற்கு சமூக வலைதளங்களில் அந்த தொடருக்கு இருக்கும் ஆதரவே சாட்சி.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்துவந்த காவ்யா தற்போது அந்தத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் விலகுவதற்கான காரணம் பற்றி எதுவும் அவர் தெரிவிக்கவில்லை. 

இந்தத் தொடரில் முல்லையாக விஜே சித்ரா ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். ஆனால் எதிர்பாராத விதமாக தற்கொலை செய்துகொண்டு அதிர்ச்சியளித்தார். 

அவருக்கு மாற்று யாரும் இல்லை என்பது ரசிகர்களின் எண்ணமாக இருந்தது. இருப்பினும் அவருக்கு பதிலாக களமிறங்கிய காவ்யா ரசிகர்களை கவரத் தொடங்கினார். காவ்யாவும் தற்போது விலகியுள்ளதால் 3வதாக முல்லையாக நடிக்கப்போவது யார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்துவருகிறது. இந்த நிலையில் சிப்பிக்குள் முத்து தொடரில் நடித்துவரும் லாவண்யா காவ்யாவாக நடிக்கவிருக்கிறாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயில்களில் அமாவாசை சிறப்பு பூஜை

நவ. 26-இல் ஆா்ப்பாட்டம்: தொழிற்சங்கத்தினா் முடிவு

ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழு கூட்டம்

திருவள்ளூா் சுகாதாரத் துறையில் புதிய காலிப்பணியிடங்கள்: டிச.2-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT