கோப்புப்படம் 
செய்திகள்

சீரியல் நடிகை திவ்யா கண்ணீர் குற்றச்சாட்டு: நடிகர் அர்ணவ்-க்கு காவல்துறை சம்மன் 

தனது காதல் கணவர் அர்ணவ் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாக பிரபல சீரியல் நடிகை திவ்யா அளித்த புகாரின் பேரில் அர்ணவ்-க்கு காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

DIN

தனது காதல் கணவர் அர்ணவ் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாக பிரபல சீரியல் நடிகை திவ்யா அளித்த புகாரின் பேரில் அர்ணவ்-க்கு காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

பிரபல சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'செவ்வந்தி' சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகை திவ்யா ஸ்ரீதர். ’கேளடி கண்மணி’ எனும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர், 'மகராசி' சீரியலில் நடித்திருந்தார். 

புதுக்கோட்டையைச் சேர்ந்த நைனா முகமத் என்பவர் 'அர்ணவ்' என்ற பெயரில் தற்போது 'செல்லம்மா' சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

திவ்யாவுக்கு அர்ணவுடன் கடந்த 2017ல் சீரியலில் நடிக்கும் போது பழக்கம் ஏற்பட்டு லிவ்-இன்னில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர். 

இந்நிலையில் கணவர் அர்ணவ் தன்னை துன்புறுத்துவதாக திவ்யா விடியோ ஒன்றை வெளியிட்டார்.

கரோனா காலத்தில் வேலையில்லாமல் இருந்த அர்ணவையும் வீட்டுச் செலவுகளையும் தானே பார்த்துக்கொண்டதாகவும், இருந்தும் அவர் தன்னை துன்புறுத்துவதாகவும்  கூறியுள்ளார். 

ஆனால், அர்ணவ் தரப்பில் இந்த குற்றச்சாட்டு மறுக்கப்பட்டதுடன் அவர் ஆவடி காவல் ஆணையரகத்தில் திவ்யா மீது புகார் கொடுத்துள்ளார். 

தற்போது திவ்யா கர்ப்பமாக இருக்கிறார், மேலும் மருத்துவமனையில் இருந்து அவர்  அந்த விடியோவை வெளியிட்டார்.

சீரியல் நடிகர் அர்ணவ் நாளை மறுநாள்(அக்.14) காவல்துறை விசாரணைக்கு ஆஜராக போரூர் அனைத்து மகளிர் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நடிகர் அர்ணவ் மீது போரூர் அனைத்து மகளிர் காவல் துறை 3 வழக்குகள் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT