ஆதிபுருஷ் திரைப்படத்தில் இந்து கடவுள்கள் மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்த வழக்கில் நடிகர்
ஸூக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஆதிபுருஷ். ஹிந்தி இயக்குநர் ஓம் ரௌத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அதிகம் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது.
குறிப்பாக இந்தப் படத்தின் சிஜி காட்சிகள் மோசமாக இருப்பதாகவும், கார்டூன் தொலைக்காட்சி பார்ப்பது போல இருப்பதாகவும் ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை பதிவுசெய்தனர்.
இதையும் படிக்க | விஜய் சேதுபதி - வடிவேலு இணையும் படம் - இயக்குநர் யார் தெரியுமா ?
இந்த நிலையில் ஹிந்து கடவுள்களான ராமர், ஹனுமன் உள்ளிட்டோரின் பண்புகள், நடத்தை, தோற்றம் ஆகியவற்றுக்கு மாறாக அவர்களை தவறாக சித்திரித்துள்ளதாக தில்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் பிரபாஸ் மற்றும் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் மஹாராஷ்டிரத்தில் ஆதிபுருஷ் படத்தை வெளியிட விடமாட்டோம் என அம்மாநில பாஜக தலைவர் ராம் கதம் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ பிரசாத், டீசரில் ஹிந்து கடவுள்களை தவறாக சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் அனுமான் மீசையில்லாமல் வெறும் தாடியுடன் இருப்பது முஸ்லீம்களைப் போல் இருப்பதாகவும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.