செய்திகள்

வெங்கட் பிரபுவின் புதிய படத்தில் இணைந்த சரத்குமார் - அரவிந்த் சாமி - சுவாரசியத் தகவல்

வெங்கட் பிரபு - நாக சைதன்யாவின் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

வெங்கட் பிரபு - நாக சைதன்யாவின் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மாநாடு படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது தெலுங்கில் நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்துக்கு இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். 

இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த விவரங்களை தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் அறிவித்துள்ளது. அதன் படி இந்தப் படத்தில் பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி, வெண்ணிலா கிஷோர் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

தற்போது இந்தப் படத்தில் சரத்குமார் மற்றும் அரவிந்த் சாமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா வேடத்துக்கு முதலில் அரவிந்த் சாமி  நடிக்கவிருந்தார். ஆனால் மாநாடு படத்தின் படப்பிடிப்பு தாமதமானதால் அரவிந்த் சாமியால் நடிக்கமுடியவில்லை. அவருக்கு பதிலாக எஸ்.ஜே.சூர்யா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யார் இந்த மத் டெய்ட்கே? 24 வயது செய்யறிவு ஆய்வாளர்! ரூ.2,000 கோடி சம்பளம்!!

அவதூறு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்!

10 கோடி பார்வைகளைப் பெற்ற கனிமா!

லாக்-அப் மரணம் அல்ல! கோவை காவல் நிலையத்தில் ஒருவர் மர்ம மரணம்! நடந்தது என்ன?

தொடர்ந்து 2-ம் நாளாக சரிவில் பங்குச் சந்தை!

SCROLL FOR NEXT