முகப்பு
செய்திகள்

வெளியானது ’சோழா..சோழா’ பாடல் விடியோ

பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்று ரசிகர்களைக் கவர்ந்த ‘சோழா..சோழா’ பாடலின் விடியோ வெளியாகியுள்ளது.

Updated On : 14 அக்டோபர், 2022 at 12:02 PM
பகிர்:

பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்று ரசிகர்களைக் கவர்ந்த ‘சோழா..சோழா’ பாடலின் விடியோ வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

இருப்பினும் இந்தப் படம் உலக அளவில் வசூல் சாதனை படத்தை வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. 

Advertisement

பொன்னியின் செல்வன் திரைப்படம் இதுவரை ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தீபாவளி வரை வேறு எந்த படங்களும் வெளியாகததால் இந்தப் படத்தின் வசூல் ரூ.500 கோடியைத் தாண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கணித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற ’சோழா..சோழா’ பாடலின் விடியோ வெளியாகியுள்ளது. 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இளங்கோ கிருஷ்ணன் வரிகளில் உருவான இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.