செய்திகள்

''முதலில் பொன்னியின் செல்வனில் என்னுடைய தோற்றம் இதுதான்'' - ஜெயராம் பகிர்ந்த புகைப்படம்

பொன்னியின் செல்வனுக்காக தனது தோற்றம் குறித்த புகைப்படத்தை நடிகர் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

DIN

பொன்னியின் செல்வனுக்காக தனது தோற்றம் குறித்த புகைப்படத்தை நடிகர் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

பொன்னியின் செல்வன் உலகமெங்கும் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது. முதல் பாகத்திலேயே படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக வசூலித்துவிட்டது. இனி இரண்டாம் பாகம் வெளியாகும்போது கிடைப்பதெல்லாம் லாபம் மட்டுமே என்று கூறப்படுகிறது. 

இந்தப் படத்துக்கு துவக்கத்தில் கலவையான விமர்சனங்களே கிடைத்தது. இருப்பனும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்ததால் வசூல் சாதனை படைத்துவருகிறது. 

இந்தப் படத்தில் ஆழ்வார்கடியான் நம்பியாக நடித்துள்ள நடிகர் ஜெயராம் முதலில் தனது தோற்றம் இப்படித்தான் இருந்தது என புகைப்படம் பகிர்ந்துள்ளார். அதில் அவர் மீசை, தாடியுடன் இருக்கிறார். பின்னர் தற்போது திரைப்படத்தில் உள்ள தோற்றத்துக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். 

மீசை, தாடியில்லாமல் இருப்பதுதான் ஆழ்வார்கடியான் வேடத்துக்கு பொருத்தமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT