செய்திகள்

விஜய் சேதுபதி வெளியிட்ட பிரியாமணியின் புதிய பட போஸ்டர்! 

நடிகை பிரியாமணி நாயகியாக நடிக்கும் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

DIN

நடிகை பிரியாமணி நாயகியாக நடிக்கும் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

பருத்திவீரன் படத்தில் முத்தழகாக ரசிகர்களைக் கவர்ந்தவர் பிரியாமணி. இந்தப் படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கமர்ஷியல் படங்களில் நடித்துவந்தார். 

நீண்ட இடைவேளைக்கு பிறகு தி ஃபேமிலி மேன் என்ற இணையத்தொடர் அவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது. அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பாவில் நடித்திருந்த அவர், தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துவரும் ஜவான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். 

தற்போது பிரியாமணி நாயகியாக நடிக்கும் ‘டிஆர்.56’ என்ற படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “பிரியாமணி நடிக்கும் இந்த படத்தின் போஸ்டரை வெளியிடுவதில் மகிழ்ச்சி. படக்குழுவிற்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். 

ப்ரவீன் ரெட்டி கதை, திரைக்கதை எழுதி தயாரித்துள்ளார். ராஜேஷ் ஆன்ந்த் லீலா இயக்கத்தில், நோபின்பால் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகுமென அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்ஜெட் தாக்கல்: சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது!

திமுக அரசு ஒரேயொரு குடும்பத்துக்கானது மட்டுமே: நயினார் நாகேந்திரன்

2 ஆண்டுகளுக்குப் பிறகு காஸா எல்லையை மீண்டும் திறக்கும் இஸ்ரேல்!

கம்பத்தில் சிறுத்தை நடமாட்டமா? பொதுமக்கள் அச்சம்!

வெடிகுண்டு மிரட்டல்: அகமதாபாத்திற்கு திருப்பிவிடப்பட்ட குவைத்-தில்லி விமானம்

SCROLL FOR NEXT