செய்திகள்

திடீரென சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் நீளம் குறைப்பு

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படம் நாளை(அக்டோபர் 21)  வெளியாகவுள்ள நிலையில் படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படம் நாளை(அக்டோபர் 21)  வெளியாகவுள்ள நிலையில் படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தெலுங்கில் ஜதி ரத்னாலு என்ற நகைச்சுவை வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குநர் அனுதீப்புடன் சிவகார்த்திகேயன் கைகோர்த்துள்ள படம் பிரின்ஸ். தமன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் நாளை (அக்டோபர் 21 ) வெளியாகிறது. இதில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

முதலில் இந்தப் படத்தின் ரன் டைம் 2 மணி நேரம் 23 நிமிடங்களாக இருந்தது. தற்போது 2 மணி நேரம் 11 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. படம் வெளியானதும் நீக்கப்பட்ட காட்சிகள் படக்குழு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சமீப காலமாக நீளம் அதிகமாக இருக்கும் படங்களுக்கு எதிர்மறை விமர்சனங்கள் கிடைத்தது. இதனை மனதில் வைத்து படத்தின் நீளம் குறைக்கப்பட்டிருக்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

SCROLL FOR NEXT