செய்திகள்

''விஜய்யிடம் கதை சொல்லியிருக்கேன்'' - இளம் இயக்குநர் பகிர்ந்த தகவல்

விஜய்யிடம் ஒரு கதை சொல்லியிருப்பதாக பிரபல இளம் இயக்குநர் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். 

DIN

விஜய்யிடம் ஒரு கதை சொல்லியிருப்பதாக பிரபல இளம் இயக்குநர் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். 

நடிகர் விஜய் சமீப காலமாக இளம் இயக்குநர்களுடன் இணைந்து  பணியாற்றிவருகிறார். லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலிப்குமார் என அடுத்தடுத்து இரண்டு இளம் இயக்குநர்களுடன் பணிபுரிந்திருக்கிறார். 

இதில் லோகேஷ் இயக்கிய மாஸ்டர் நல்ல வெற்றியைப் பதிவுசெய்த நிலையில், நெல்சனின் பீஸ்ட் ரசிகர்களைக் கவரவில்லை. தற்போது வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடித்துள்ள அவர் அடுத்ததாக லோகேஷின் தளபதி 67 படத்தில் நடிக்கிறார். 

இதன் ஒரு பகுதியாக 'கோமாளி' பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தற்போது 'லவ் டுடே' என்ற படத்தை இயக்கி, ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படம் தொடர்பாக சமீபத்தில் ஒரு யூடியூப் பக்கம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். 

அப்போது பேசிய அவர், ''இத சொல்லலாமானு தெரியல. கோமாளி படம் வெளியான பின் நடிகர் விஜய்யை சந்தித்து ஒரு கதை சொன்னேன். அந்தக் கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. வாய்ப்பு கிடைத்தால் எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு ஏழைத்தாயின் மகன்... விமர்சனத்திற்கு ஆளாகும் ஜிவி பிரகாஷ்!

முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 3 லட்சம் திருட்டு!

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!

22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

SCROLL FOR NEXT