செய்திகள்

''எல்லாத்தையும் கொடுத்த படம், தனுஷுக்கு நன்றி'' - 'நானும் ரௌடி தான்' குறித்து விக்னேஷ் சிவன் உருக்கம்

நானும் ரௌடி தான் படம் வெளியாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் உருக்கமான விடியோவைப் பகிர்ந்துள்ளார். 

DIN

நானும் ரௌடி தான் படம் வெளியாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் உருக்கமான விடியோவைப் பகிர்ந்துள்ளார். 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த நானும் ரௌடி தான் திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகளாகிறது. விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதலிக்க ஆரம்பித்து 7 ஆண்டுகளாகிறது என்றும் சொல்லலாம். 

நானும் ரௌடி தான் படப்பிடிப்பின்போதுதான் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. தற்போது இருவருக்கும் திருமணம் முடிந்து இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர்களாகிவிட்டனர். 

ரொமாண்டிக் காமெடி வகைப்படமாக வெளியான இந்தப் படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். 'போடா போடி' படத்தின் தோல்வியிலிருந்து விக்னேஷ் சிவனுக்கும் சரி, தொடர் தோல்விகளில் இருந்த விஜய் சேதுபதிக்கும் தேவைப்படும் வெற்றியை நானும் ரௌடி தான் படம் அளித்தது. 

அனிருத்தின் பாடல்கள் ரசிகர்களை திரையரங்குகள் நோக்கி இழுத்துவந்தது என்றே சொல்ல வேண்டும். அதுவரை அதிரடி பாடல்களைக் கொடுத்துவந்த அனிருத் நானும் ரௌடி தான் படத்துக்காக மெலோடி இசையை வாரி வழங்கி காதலர்களுக்கு பெரிதும் உதவினார். 

மிகவும் உணர்வுப்பூர்வமான சென்டிமென்டுகள் நிறைந்த கதையை 2 மணி நேரம் முழுக்க முழுக்க நகைச்சுவையாகக் கையாண்டு வெற்றிபெற்றிருக்கிறார் விக்னேஷ் சிவன். 

இந்த நிலையில், நானும் ரௌடி தான்  வெளியாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டோகிராம் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த விடியோவில் நயன்தாரா உட்பட நடிகர்களுக்கு காட்சி ஒன்றை விளக்கிக்கொண்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். அவரது பதிவில், ''7 ஆண்டுகள் இன்ப அனுபவம். இந்த படம் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. இதற்காக எப்பொழுதும் நன்றியுடன் இருப்பேன் தனுஷ் சார்" என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT